உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய ஒவ்வொரு மாதமும் சிறப்பு அனுமதி சீட்டுக்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பிப்ரவரி மாதம் தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு அனுமதி சீட்டுகள் நாளை (ஜன.28) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
இலவச தரிசன டோக்கன்கள் ஜனவரி 29ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பேருக்கு மட்டும் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படவுள்ளது.