திருப்பதி,திருச்சானூர் பத்மாவதி அம்மன் கோயில் வருடாந்திர வசந்த விழா கோலாகலமாக நடைபெற்றது. ஆலயத்திற்கு அருகில் உள்ள சுக்ரவாரபு தோட்டத்தில் அம்மாவுக்கு திருமஞ்சன அர்ச்சனை விழா நடைபெற்றது. மஞ்சள், குங்குமம், பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருள்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
திருப்பதி பத்மாவதி அம்மன் வருடாந்திர வசந்த விழா
திருச்சானூர் பத்மாவதி அம்மன் வருடாந்திர வசந்த விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருப்பதி பத்மாவதி அம்மனுக்கு விமர்சையாக நடந்த வசந்த விழா
கோடை காலத்தில் மேஷ ராசியில் சூரியன் அதிக பிரகாசமாக இருப்பதால் சூரியனின் வெப்பத்தால் உயிர்களுக்கு நோய்கள் ஏற்படும். உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தாயான ஸ்ரீ பத்மாவதி அம்மனை வசந்த விழா மூலம் ஆராதனை செய்வதால், உடல் மற்றும் மன நோய் என்பது நம்பிக்கை.
இதையும் படிங்க:Weekly Horoscope: மே 3 வது வாரத்திற்கான ராசிபலன்