தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

IT returns: வருமான வரி தாக்கல் செய்யப் போகிறீர்களா - படிவம் 16 இல்லாமலும் செய்யலாம்! - வருமான வரி தாக்கல் செய்வது எப்படி

சம்பளம் பெறக் கூடிய வருமான வரி செலுத்தக்கூடிய நபர்கள் 2022 - 2023 நிதி ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 31 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இரண்டு கோடியே 22 லட்சம் பேர், தற்போது வரை வருமான வரித் தாக்கல் செய்து இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

IT returns: வருமான வரி தாக்கல் செய்யப் போகிறீர்களா - படிவம் 16 இல்லாமலும் செய்யலாம்!
IT returns: வருமான வரி தாக்கல் செய்யப் போகிறீர்களா - படிவம் 16 இல்லாமலும் செய்யலாம்!

By

Published : Jul 17, 2023, 7:15 AM IST

ஹைதராபாத் (தெலங்கானா): 2022 - 2023 நிதி ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவடைய உள்ளது. வருமான வரித் தாக்கல் செய்யும் விவகாரத்தில், இன்னும் பலருக்கு, சந்தேகங்கள் தொடர்ந்து கொண்டே தான் உள்ளன.

நீங்கள் பணிபுரியும் நிறுவனம், உங்களுக்கு இதுவரை படிவம் 16-ஐ வழங்கவில்லை என்றாலோ அல்லது உங்களது சம்பளம், வருமானவரி வரம்பை விட குறைவாக இருப்பதால் உங்களுக்கு அது வழங்கப்படவில்லை என்றால் உங்கள் வருமானத்தை எவ்வாறு தாக்கல் செய்வது? என்பது தான், இன்றைய பெரும்பாலானோரான கேள்வி ஆக உள்ளது.

உங்களது சம்பளம், வருமான வரி வரம்பை மீறும் போது, நீங்கள் பணிபுரியும் நிறுவனங்கள், உங்களுக்கு படிவம் 16-ஐ வழங்குகின்றன. உங்களது வருமான மூலத்தில் கழிக்கப்பட்ட வரியும் (TDS) அதற்கு விதிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால், சில ஊழியர்களுக்கு இந்தப் படிவங்கள் வழங்கப்படாமல் இருக்கும் நிலையில், அவர்கள் எவ்வாறு, வருமான வரி தாக்கல் செய்வது என்ற கேள்வி, நமக்கு சாதாரணமாகவே எழுகிறது. ஆனால் படிவம் 16 இல்லாமலும் வருமான வரித் தாக்கல் செய்யலாம்.

ஒருவர் ஒரு நிதியாண்டில் பெற்ற சம்பளம் மற்றும் செலுத்தப்பட்ட வரி விவரங்களுடன் ஒப்பிட்டு, படிவம் 16, அவர் சார்ந்த நிறுவனங்களின் மூலம் வழங்கப்படுகிறது. அவரது சம்பளம், வருமானம் வரி வரம்பை விட குறைவாக இருக்கும்போது, இந்தப் படிவம் வழங்கப்படுவது இல்லை. சில நேரங்களில், இந்த படிவத்தை நிறுவனத்திடம் இருந்து ஊழியர் இன்னும் பெறாமலும் இருக்கலாம்.

முதலில், 2022 - 2023ஆம் நிதியாண்டில் நீங்கள் பெற்ற சம்பள விவரங்களை பட்டியலிடுங்கள். அதை, உங்கள் பே சிலிப் அல்லது வங்கிக் கணக்கு விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். அடுத்ததாக, உங்களது மொத்த வருமானம் எவ்வளவு என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். சம்பள விவரங்களில் வருங்கால வைப்பு நிதி தொகை, வீட்டு வாடகை (HRA) உள்ளிட்ட விவரங்கள் இதில் அடங்கும். இவை அனைத்தும் விதிவிலக்குகளின் கீழ் காட்டப்பட வாய்ப்பு உள்ளது.

இதன்பின்னர், சம்பளம் தவிர வேறு ஏதேனும் வருமானம் உள்ளதா என சரிபார்க்கவும். உதாரணமாக, சேமிப்புக் கணக்கில் வட்டி இருக்கிறதா, நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி, டிவிடெண்ட் போன்றவை உள்ளதா என்பதைக் கண்டறியவும். வங்கிக் கணக்கு விவரங்களைச் சரிபார்க்கும்போது இவைகளை தெரிந்து கொள்ள முடியும்.

பின்னர், அதிகாரப்பூர்வ வருமான வரி இணையதளத்திற்குச் சென்று படிவம் 16, AIS (ஆண்டுத் தகவல் அறிக்கை) இருந்தால் பதிவிறக்கம் செய்யவும். அதில் உள்ள தகவல்களுடன் உங்கள் விவரங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். அதன் பிறகு, நீங்கள், வருமான வரித் தாக்கல் செய்யலாம். இறுதியாக, உங்களுக்கு, விலக்குகள் இருக்கும்பட்சத்தில், வரி விதிக்கக்கூடிய அளவிற்கு வருமானம் இல்லாவிட்டாலும், வருமான வரித் தாக்கல் செய்ய மறந்து விடாதீர்கள். இது எதிர்காலத்தில், உங்களுக்கு பிரச்னைகள் ஏற்படுவதில் இருந்து உங்களைக் காக்கும்.

பான் மற்றும் ஆதார் இணைக்கப்படாவிட்டால் வரி திரும்பப் பெறப்படாது என வருமான வரித்துறை மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது. பிரிவு 234H இன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி இரண்டையும் இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'பாஜக ஆட்சி நாட்டின் சூழலுக்கு உகந்தது அல்ல' - குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி!

ABOUT THE AUTHOR

...view details