டெல்லி:இந்தியாவில் கடந்தாண்டு ஜனவரி 16ஆம் தேதி, கரோனா தொற்றுக்கு எதிராக சுமார் 130 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும் நோக்குடன் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் தொடங்கிய ஓராண்டில் நாடு முழுவதும் 156.76 கோடி டோஸ்கள் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து பிரதமர் மோடி, நாம் இன்று தடுப்பூசி இயக்கத்தின் ஓராண்டைநிறைவு செய்துள்ளோம். தடுப்பூசி இயக்கத்தில் தொடர்பு கொண்ட ஒவ்வொருவரையும் நான் வணங்குகிறேன். அதேசமயம், நமது மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களின் பங்கு அளப்பரியதாகும். கரோனா விதிமுறைகளையும் கடைப்பிடித்து, விரைவில் பெருந்தொற்றிலிருந்து மீள்வோம் எனத் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி இயக்கம்
- ஜனவரி 16, 2021: சுகாதாரப் பணியாளர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்.
- பிப்ரவரி 2, 2021: முன்னணி ஊழியர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்.
- மார்ச் 1, 2021: 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45-60 வயதுக்குட்பட்ட நோய்த்தொற்றுகள் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்.
- ஏப்ரல் 1, 2021: 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்.
- மே 1, 2021: 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்.
- அக்டோபர் 21, 2021: 100 கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்தி இந்தியா சாதனை.
- ஜனவரி 3, 2022: 15-18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்.
- ஜனவரி 10, 2022: பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்.
- ஜனவரி 16, 2022: ஓராண்டு நிறைவு 156.76 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தி சாதனை
இதையும் படிங்க:கர்நாடகாவில் விஸ்வரூபம் எடுக்கும் கரோனா