தும்கூரு:கர்நாடக மாநிலம் தும்கூருவின் அங்கசந்திரா வனப்பகுதிக்கு அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் சிமெண்ட் குழாய் உள்ளே புலியின் உடல் கிடந்துள்ளது. இதைக்கண்ட பொதுமக்கள் தும்கூரு வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் அடிப்படையில், வனத்துறை அலுவலர்கள் சம்பவயிடத்துக்கு விரைந்து புலியின் உடலை மீட்டனர்.
இதுகுறித்து வனத்துறை தரப்பில், "அங்கசந்திரா வனப்பகுதிக்கு அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் புலி நடமாட்டம் இருப்பதாக எந்த தகவலும் வந்தில்லை. முதல்முறையாக 4 நாள்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தோம். இந்த நிலையிலேயே புலியின் உடல் கிடைத்துள்ளது.
இந்த புலிக்கு 4 வயது இருக்கும். முகத்திலோ, உடலிலோ காயங்கள் ஏதும் கண்டறியப்படவில்லை. பத்ரா புலிகள் சரணாலயத்தைச் சேர்ந்த மருத்துவர் குழு புலியின் உடற்கூராய்வில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவிலேயே உயிரிழப்புக்கான காரணம் தெரியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.