கர்நாடகா சிவமொக்காவில் தசரா பண்டிகையைக் கொண்டாடும் வகையில் அக். 2ஆம் தேதி நடைபெற்ற நாய்கள் கண்காட்சி பெறும் வரவேற்பை பெற்றது. செல்லப் பிராணிப் பிரியர்கள் பலரும் தங்களது செல்ல நாய்களை கண்காட்சிக்கு அழைத்து வந்தனர். இந்தக் கண்காட்சியில் கலந்துகொண்ட பெங்களூரைச் சேர்ந்த சதீஷ் என்பவரது திபெத்தியன் மஸ்டிஃப் நாய் பார்வையாளர்களின் மொத்த கவனத்தையும் பெற்றது. அதன் விலை ரூ.10 கோடி என்று சதீஸ் தெரிவிக்கிறார்.
திபெத்தியன் மஸ்டிஃப் நாய் விலை ரூ. 10 கோடியாம்... நாய்கள் கண்காட்சியில் வியப்பு... - கர்நாடகா நாய்கள் கண்காட்சி
கர்நாடகாவில் தசரா பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்ட நாய்கள் கண்காட்சியில் திபெத்தியன் மஸ்தீஃப் நாய் பார்வையாளர்களை கவர்ந்தது. அதன் மதிப்பு ரூ.10 கோடி என்று உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
பல பேர் இந்த நாயுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதும், கொஞ்சுவதும், அதைப் பற்றி உரிமையாளர் சதீஷிடம் விசாரிப்பதுமாக இருந்தனர். இந்த நாய்க்கு பீமா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த விலை உயர்ந்த நாய், சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சதீஷ் கூறுகையில், “இந்த நாய்கள் கண்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக நான் எனது நாயை அழைத்து வந்துள்ளேன். 6 மாதங்களுக்கு முன்பு இதை பெஜிங்கிலிருந்து வாங்கினேன். நாள்தோறும் சிக்கன், ஏசி வசதி இருந்தால் மட்டுமே இதை பராமரிக்க முடியும். மாதந்தோறும் 25,000 ரூபாய் வரை செலவாகிறது” என்றார்.
இதையும் படிங்க: துர்கா பூஜை பந்தலில் தீ விபத்து - 2 குழந்தைகள் உள்பட மொத்தம் 5 பேர் பலி!