கடந்தாண்டு கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை(Farm Laws) அரசு திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அறிவித்தார். விவசாயிகளின் உணர்வுக்கு மதிப்பளித்து இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
இம்மாத இறுதியில் நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அரசு முறையாக சட்டத்தை திரும்பப்பெறும் நடவடிக்கையை மேற்கொள்ளும் என பிரதமர் தெரிவித்தார்.
பிரதமரின் இம்முடிவு குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருத்துகளை பதிவு செய்துவருகிறார்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இம்முடிவு தொடர்பாக ட்வீட் செய்துள்ளார்.
ராகுல் காந்தி ட்வீட்
ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில்(Rahul Gandhi tweet), சத்தியாகிரகம் மூலம் நாட்டிற்கு உணவு வழங்கும் விவசாயிகள் அகம்பாவத்தை அடிபணிய வைத்துள்ளனர். அநீதிக்கு எதிராக அவர்கள் பெற்றுள்ள இந்த வெற்றிக்கு வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் வேளாண் சட்டப் போராட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தாண்டு தொடக்கத்தில் பஞ்சாப், உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடித் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இம்முடிவை எடுத்துள்ளது.
இதையும் படிங்க:'அரசின் 3 வேளாண்மை சீர்த்திருத்தங்களைவிட நிலச்சீர்த்திருத்தமே முக்கியம்...!'