தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இளம்பெண்ணை வீட்டில் பூட்டிவைத்து 4 பேர் பாலியல் வன்கொடுமை.. புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம்! - முதலியார்பேட்டை அனிதா நகர்

புதுச்சேரியில் ஆட்டோ டிரைவரின் பாலியல் சீண்டலில் இருந்து தப்பிய இளம்பெண்ணை, ஆறுதல் கூறி வீட்டிற்குள் பூட்டி வைத்து பாலியல் தொல்லை கொடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் இளம்பெண் வீட்டில் அடைத்து பாலியல் வன்கொடுமை
புதுச்சேரியில் இளம்பெண் வீட்டில் அடைத்து பாலியல் வன்கொடுமை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 10:13 PM IST

புதுச்சேரி: கடந்த 30ஆம் தேதி இரவு 22 வயது இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் கோபித்துக் கொண்டு, புதுச்சேரி தமிழக எல்லை பகுதியான ஜெயங்கொண்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குப் புறப்பட்டுள்ளார். அப்போது ஆட்டோ மூலம் பஸ் ஸ்டாண்ட் சென்ற அந்த பெண், ஆட்டோவுக்கு கொடுக்க பணம் இல்லை என்று கூறியுள்ளார்.

அப்பெண்ணை அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர், முதலியார்பேட்டை அனிதா நகர் பகுதியில் ஆட்டோவை நிறுத்துவிட்டு, அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்போது அப்பெண் சத்தம் எழுப்பியதை அடுத்து, அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர் அப்பெண் தனியாக நடந்து சென்றதைக் கவனித்த அதே பகுதியை சார்ந்த நான்கு பேர், அப்பெண்ணை அழைத்து ஆறுதலாகப் பேசியுள்ளனர்.

பின்னர் அந்த இளம் பெண்ணை, அவர்களது வீட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு நால்வரும் மது போதையில் அப்பெண்ணை வீட்டில் பூட்டிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த நான்கு பேரிடம் இருந்து தப்பிய இளம் பெண், அதே பகுதியில் உள்ள ஒரு பேக்கரி உரிமையாளரிடம் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளை கூறியுள்ளார்.

இதையும் படிங்க: காதலிக்க மறுத்ததால் இளம்பெண் கொலை.. நெல்லையை உலுக்கிய சிறுவனின் வெறிச்செயல்!

இதனை அடுத்து அந்த பேக்கரியின் உரிமையாளர், முதலியார்பேட்டை காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர். அப்பெண்ணை மீட்டு, மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

பின்னர் காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில் ஆட்டோ டிரைவர் மற்றும் அனிதா நகரைச் சேர்ந்த 4 பேர் பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையிலான காவல்துறையினர், பாலியல் பலாத்காரம் மற்றும் கடத்தல் பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து, ஆட்டோ டிரைவர் சாதிக் பாஷா மற்றும் அனிதா நகரைச் சேர்ந்த அரவிந்த், தினேஷ் ஆகிய மூவரைக் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சாலை வசதியில்லாததால் தவிக்கும் நெக்னாமலை மக்கள்.. கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கி சென்ற அவலம்!

ABOUT THE AUTHOR

...view details