டெல்லி:நாடாளுமன்றத்தில் மூன்று நாள்களாக எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக, விலைவாசி உயர்வை கண்டிக்கும் வகையிலான பதாகைகளை ஏந்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்துவருகின்றனர். இதனால், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் வேண்டுகோளை கேட்காமல் பேராட்டம் நடத்தியதாக காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன் 4 பேரும் மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து மாநிலங்களவையிலும் நேற்று (ஜூலை 27) விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் 19 பேர், இந்த வாரம் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதில், எம்பிக்கள் கனிமொழி, என்விஎன் சோமு, எம்.எச். அப்துல்லா, கல்யாணசுந்தரம், கிரிராஜன், என்.ஆர் இளங்கோ, சண்முகம் உள்ளிட்டோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.