ஸ்ரீநகர்:. கடந்த சில நாட்களுக்கு முன் புலம்பெயர் தொழிலாளர்கள் சிலர் தீவிரவாத தாக்குதலால் உயிரிழந்தனர். கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளுக்கு இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீரில் தொடர்ந்த தாக்குதல்!- லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாதிகள் கைது! - jammu kashmir
ஜம்மூ-காஷ்மீரின் மூன்று லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாத அமைபைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த மூவரும் சோபூரில் (sopore)உள்ள ஹைகம் பகுதியில் இருந்தவர்கள். மேலும் பிடிபட்டவர்களிடம் இருந்து மூன்று சீன ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக ஜம்மூ மற்றும் காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலும், பொதுமக்கள் மீதான தாக்குதலும் அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஜம்மூ- காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், ரயில்வே போலீசார் உயிரிழப்பு!