தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கள்ளச் சந்தையில் 'ரெம்டெசிவிர்' மருந்து விற்ற 3 பேர் கைது!

டெல்லி: கள்ளச்சந்தையில் 'ரெம்டெசிவிர்' மருந்தை விற்ற மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர் விற்றவர்கள் கைது
கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர் விற்றவர்கள் கைது

By

Published : Apr 26, 2021, 4:22 PM IST

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தும் 'ரெம்டெசிவிர்' மருந்தை, சிலர் சட்ட விரோதமாக விற்று வருகின்றனர். இதைக் கண்காணிக்க சில மாநிலங்கள் தனிக்குழு அமைத்து கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் சட்ட விரோதமாக 'ரெம்டெசிவிர்' மருந்தை விற்ற மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கைதான மூவரில் இருவர் தர்யாகஞ்ச், சாந்தினி சௌக் ஆகிய பகுதிகளில் மருந்து கடைகள் நடந்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

லிகித் குப்தா, அனுஜ் ஜெயின் ஆகிய இருவரும் மருந்து கடையும், ஆகாஷ் வர்மா நகை கடையும் நடந்திவருகிறார். மருந்துத் துறையில் ஒரு 'ரெம்டெசிவிர்' ரூபாய் 2 ஆயிரத்து 800 முதல் 2 ஆயிரத்து 899 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், இம்மூவரும் ரூபாய் 70 ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்படுகிறது.

டெல்லியில் சட்ட விரோதமாக 'ரெம்டெசிவிர்' மருந்தை விற்பதைத் தடுக்க 15 மாவட்டங்களுக்கும் தனிக்குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அம்மாநில காவல் ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details