ஒடிஷா: ஒடிஷாவின் நுவாபாடா மாவட்டத்தில் உள்ள பைசாதானி என்ற பகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் மூன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
சிஆர்பிஎஃப் வீரர்கள் ஒரு ராணுவ முகாமிலிருந்து மற்றொரு முகாமிற்கு சென்றபோது, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், வீரர்கள் அவ்வழியாக செல்கிறார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்த மாவோயிஸ்டுகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.