திரிச்சூர்(கேரளா): கேரளாவின் மிகப்பெரிய திருவிழாவான திரிச்சூர் பூரம் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. கேரளாவின் முக்கிய சுற்றுலா மற்றும் மத நிகழ்வுகளில் ஒன்றான திருச்சூர் பூரம் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வெறிச்சோடி காணப்பட்ட திருச்சூர் சென்ட்ரலில் உள்ள வடக்குநாத கோயில் வளாகத்தில், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
விழாவில் மொத்தம் 30 யானை காவடிகள், வண்ணமயமான குடைகள் மற்றும் பிற அலங்காரங்களுடன் ஊர்வலம் நடந்தது. நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்கும் உலகப்புகழ் பெற்ற 'இளஞ்சிதரா மேளம்', பூரம் பிரியர்களுக்கு ஒலி மற்றும் ஒளி விருந்தாக அமைந்தது. இதனையடுத்து இன்று அதிகாலை 3 மணிக்கு பிரம்மாண்டமான பைரோடெக்னிக் நிகழ்ச்சியுடன் பூரம் நிறைவடைந்தது.
திருச்சூர் பூரம் திருவிழா- கரோனா ஊரடங்கிற்கு பின் களைகட்டியது இதையும் படிங்க:திருச்சூர் பூரம் விழாவில் யானை அட்டகாசம்!