திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக்கோரி புதுச்சேரி தமிழ்ச்சங்கம் சார்பில் 24 மணி நேரம் திருக்குறள் குறித்தான தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று காலை தொடங்கியது. புதுச்சேரி தமிழ் சங்க தலைவர் முனைவர் முத்து முன்னிலையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் கலந்துகொண்டு திருக்குறள் தொடர் சொற்பொழிவை தொடங்கி வைத்தார்.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: 24 மணி நேர குறள் சொற்பொழிவு - puduvai tamil sangam
புதுச்சேரி: ஒன்றிய அரசு திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி புதுச்சேரி தமிழ்ச்சங்கம் சார்பில் 24 மணிநேரம் தொடர் திருக்குறள் சொற்பொழிவு நடைபெற்றுவருகிறது.
thirukkural
நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கி இன்று காலை 8.30 மணிவரை தொடர்ந்து திருக்குறள் குறித்தான தொடர் சொற்பொழிவு நடத்தி திருக்குறளை தேசிய நூலக மாநில அரசும் ஒன்றிய அரசும் அறிவிக்க வேண்டும் என்று தமிழ்ச்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடர் சொற்பொழிவில் சிறுவர்கள், பெரியவர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள் என அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் தமிழ்ச்சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.