இந்தியாவின் கரோனா பரவல் தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னாள் தலைவரான மருத்துவர் அவினாஷ் போந்தவே கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், இந்தியாவில் மூன்றாம் அலை பரவல் குறித்து தனது கருத்துகளை முன்வைத்தார்.
அதன்படி, "இந்தியாவில் அக்டோபர், நவம்பர் காலகட்டத்தில் மூன்றாம் அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, மக்கள் அனைவரும் இந்தாண்டு முழுவதும் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.
மகாராஷ்டிராவில் மட்டும் டெல்டா பிளஸ் ரக தொற்று அதிகளவில் கானப்படுகிறது. இந்தச் சூழலில் பொதுமக்கள் முகக் கவசம் அணிவதைக் குறைத்துவிட்டனர். அலட்சியப்போக்கு மீண்டும் ஆபத்தில் தள்ளிவிடும் வாய்ப்புள்ளது. எனவே மக்களிடம் விழிப்புணர்வு பரப்பரையை அரசுதொடர்ந்து கொண்டுசெல்ல வேண்டும்" என்றார்.
இந்தியாவில் மூன்றாம் அலை பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அரசு தடுப்பூசித் திட்டத்தை தீவிரமாக முன்னெடுத்துவருகிறது. இதுவரை 81 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தாண்டுக்குள் அனைவருக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என்ற இலக்கை அரசு கொண்டுள்ளது.
இதையும் படிங்க:முக்கியச் சந்திப்புகளை எதிர்நோக்கி அமெரிக்கா செல்லும் மோடி!