தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் 17 லட்சம் திருட்டு! - ஷோபியின் எஸ்பிஐ ஏடிஎம்மில் 17 லட்சம் திருட்டு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் 17 லட்சம் ரூபாயைத் திருடிச் சென்றுள்ளனர்.

sbi
எஸ்பிஐ

By

Published : Mar 22, 2021, 3:18 PM IST

காஷ்மீரில் சோபியனில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

ஏடிஎம் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்த மக்கள், காவல் துறைக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர். முதற்கட்ட தகவலின்படி, 17 லட்சம் ரூபாய் திருடுபோயுள்ளது.

முழு விசாரணைக்குப் பிறகே, எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவரும் எனக் கூறப்படுகிறது. ஏடிஎம் காவலரின் வாக்குமூலமும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:பெங்களூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ஒரு டன் குட்கா பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details