தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டை பேருந்து நிலையத்தில் 35 பயணிகளுடன் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தில் ஏறிய மர்ம ஆசாமி ஒருவர் பேருந்து ஹைதராபாத் செல்வதாக கூறி பயணிகளிடம் பணத்தை பெற்று கொண்டு, அடுத்த நிறுத்தத்தில் நடத்துநர் டிக்கெட் தருவார் என்று கூறி, பேருந்தை சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் ஓட்டி சென்றுள்ளார். அப்போது பேருந்தில் டீசல் தீர்ந்துவிட்டதால் பேருந்து நின்றுவிட்டது.
எவ்வளவோ முயன்றும் பேருந்தை அந்த திருடனால் மேற்கொண்டு ஓட்ட இயலவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பயணிகள் நீ உண்மையிலேயே அரசு பேருந்து ஓட்டுனரா என்று கேள்வி கேட்டு துளைத்து எடுத்தனர். இனிமேல் தப்ப முடியாது என்று உணர்ந்த அந்த திருடன், நான் அரசு பேருந்து ஓட்டுனர் கிடையாது என கூறியுள்ளார்.
இதையும் படிங்க:Army Dog Kent: இந்திய ராணுவத்தைச் சேர்ந்த நாய் வீர மரணம்!