பாகல்கோட் (கர்நாடகா): கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, இன்று பாகல்கோட்டில் சுற்றுப்பயணம் செய்தார். கடந்த ஜூலை 6 ஆம் தேதி, கெரூர் நகரில் நடந்த மோதலில் காயமடைந்தவர்களிடம் நலம் விசாரிக்க மருத்துவமனைக்குச் சென்ற சித்தராமையா, மருத்துவமனையில் இருந்து திரும்பும் வழியில், காயமடைந்தவர்களுக்கு அளித்த இழப்பீட்டுத் தொகையை சித்தராமையாவிடம் திருப்பிக் கொடுக்க உறவினர்கள் வந்தனர்.
இந்நிலையில், சித்தராமையா பணத்தை திரும்ப எடுக்காமல் வாகனத்தில் செல்ல முயன்றார். அப்போது எஸ்கார்ட் வாகனம் மீது முஸ்லீம் பெண் ஒருவர் 2 லட்சம் ரூபாயை வீசி, தனது கோபத்தை வெளிப்படுத்தினார். மேலும், "அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் ஓட்டு கேட்க வருவார்கள். பிறகு எங்களின் எந்த பிரச்சனையிலும் கவனம் செலுத்துவதில்லை. இந்து, முஸ்லீம் என அனைவரையும் சமமாக நடத்த வேண்டும்.