டெல்லி:கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் (Wholesale price index) 12.41 சதவீதமாக குறைந்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது மாதமாக மொத்த விலை பணவீக்கம் குறைந்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 13.93 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 11.64 சதவீதமாக இருந்தது. கடந்த மே மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் புதிய உச்சமாக 15.88 சதவீதத்தை எட்டியது.
இந்த நிலையில், ஆகஸ்ட்டில் தொடர்ந்து 17வது மாதமாக மொத்த விலை பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் நீடிக்கிறது. உற்பத்திப் பொருட்களின் விலை குறைவு காரணமாகவே பண வீக்கம் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.