குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பி.ஏ. பட்டதாரி கஷ்மா பிந்து (24). இவர் தற்போது வதோதராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது பிந்துவிற்கு திருமணம் நடைபெறவிருக்கிறது; சற்று வித்யாசமாக. மணமகன் என யாரும் கிடையாது. பிந்து தன்னை தானே விரும்பி திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.
பெற்றோர் சம்மதத்துடன் ஜூன் 11ஆம் தேதி, பிந்து கோத்ரி கோயிலில் தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ள உள்ளார். திருமண விழாவிற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. வழக்கமான திருமண விழாவில் உள்ள அனைத்து சடங்குகள், பழக்கவழக்கங்கள் பின்பற்றி திருமணம் நடைபெறவுள்ளது.
இந்த புதுவித திருமணம் குறித்து கஷ்மா பிந்து கூறுகையில், "எனக்கு திருமணம் செய்துகொள்ள விரும்பமில்லை. ஆனால் மணப்பெண் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது. நான் என்னை நேசிக்கிறேன், அதனால் நான் என்னை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தேன்.
இதற்கு முன்னர் இந்தியாவில் வேறு யாரேனும் தங்களைத் தாங்களே திருமணம் செய்துகொண்டார்களா என இணையத்தில் தேடிப் பார்த்தேன். அப்படி யாரும் செய்யவில்லை எனத் தெரியவந்தது. எனவே, நான் நாட்டில் சுய-அன்புக்கு முன்மாதிரியாக இருக்க போகிறேன்.
ஒருவர் தாங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்துகொள்வார்கள். அந்தவகையில், நான் என்னை நேசிக்கிறேன், அதனால் நான் என்னை திருமணம் செய்து கொள்கிறேன். இது சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். நான் சுய-அன்பை வெளிப்படுத்தவும், மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.
இந்த திருமணத்திற்கு என் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்" என்றார். பிந்துவின் திருமண நிகழ்ச்சியில் அவரது நெருங்கிய நண்பர்கள் கலந்துகொள்ள உள்ளனர். திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும், திருமணம் முடிந்ததும் தேனிலவுக்கு கோவா செல்ல உள்ளதாகவும் பிந்து தெரிவித்தார்.
முன்னாள் துணை மேயர் சுனிதா சுக்லா இந்நிலையில், இந்த பெண்ணின் முடிவிற்கு வதோதராவின் முன்னாள் துணை மேயரான சுனிதா சுக்லா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "இந்த இளம்பெண்ணின் திருமணத்தைப் பற்றி கேள்விப்பட்டேன். அந்த இளம்பெண் திருமணம் செய்யவிருந்த கோயில் எங்கள் பகுதியில் உள்ளது.
ஒரே ஒருத்தர் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்வதை அனுமதிக்கப்படாது. ஜாதகத்தில் ஒரு குறிப்பிட்ட யோகம் இருக்கும்போது, இளைஞர்களும் பெண்களும் பொதுவாக கும்பத்தை முதலில் திருமணம் செய்து பின்னர் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் இந்த நாகரிக நகரத்தில், இந்த வகையான சமூக திருமணங்களைஏற்றுக்கொள்ளக்கூடாது. அந்த கோயிலில் நடந்த கமிட்டிதாரர்களின் ஆலோசனைப்படி இளம்பெண்ணின் திருமணத்தை, அக்கோயிலுக்குள் அனுமதிக்கமுடியாது எனக்கூறியுள்ளனர்.” என்றார்.
இதையும் படிங்க:தன்னைத் தானே விரும்புபவள்.. இவள்..!