தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஏப்ரல் ஃபூல் பண்றீங்கனு நினைச்சோம்... கிராமத்தினர் அலட்சியத்தால் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம் - April Fool goes wrong

பெங்களூரு: விளையாட்டாக எடுத்துக்கொண்ட விஷயம் ஒரு உயிரைப் பலியாக்கியுள்ள சம்பவம் ஹோசஹல்லி கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.

The villagers do not come to help as April Fool
ராமத்தினர் அலட்சித்தால் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்

By

Published : Apr 2, 2021, 11:50 AM IST

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் ஹெச்.டி. கோட்டை தாலுகாவில் உள்ள ஹோசஹல்லி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜு என்பவரின் மகள் ஜோதி (17). ஜோதிக்கும், அவரது சகோதரருக்கும் இடையே சிறு சிறு சண்டைகள் வருவது வழக்கம்.

இதைப் போலவே நேற்றும் (ஏப்ரல் 1) வாக்குவாதம் நடந்துள்ளது. இதில் விரக்தியடைந்த ஜோதி, செய்வதறியாது விஷம் குடித்துள்ளார். இதையடுத்து, அவரது உடலுக்குள் விஷம் பரவவே மிகவும் பலவீனமடைந்துள்ளார்.

இதையறிந்த பெற்றோர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தங்கள் மகளைக் காப்பாற்ற அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல...

ஆனால் அக்கம்பக்கத்தினரோ தங்களை ஏப்ரல் ஃபூல் செய்ய, ஜோதியின் பெற்றோர் பொய் சொல்வதாக நினைத்துக் கொண்டுள்ளனர். இதனால் தாமதமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜோதி, வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

விளையாட்டாக எடுத்துக்கொண்ட விஷயம் ஒரு உயிரைப் பலியாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மொட்டை அடித்தது குத்தமா? ஃபேஸ் ரெககனஷேசனால் வேலையிழந்த ஊபர் ஓட்டுநர்!

ABOUT THE AUTHOR

...view details