கடக் (கர்நாடகா):கர்நாடகா மாநிலம் கடக் மாவட்டத்தில் உள்ள நாகாவி கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் 7 ஆம் வகுப்பு மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்யுமாறு, அப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியை ஒருவர் வற்புறுத்தியுள்ளார். இதனால், மாணவிகளும் கழிவறைகளை சுத்தம் செய்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளி மானவி ஒருவர் கூறுகையில், “கழிவறையை சுத்தம் செய்யாவிட்டால், ஆசிரியர் எங்களை அடிப்பார். எனவே எங்கள் ஆசிரியர் சொல்வதை செய்ய வேண்டும். இதுபற்றி அலுவலர்களிடம் தெரிவித்தாலும் அடிப்பார். அதேபோல் கழிவறை சுத்தமாக இல்லை. நாங்கள் பயன்படுத்துவதால், 4 முதல் 5 மாணவர்களை சுத்தம் செய்ய ஆசிரியர் கூறினார்.
அதன்படி நாங்கள் சுத்தம் செய்தோம். நான் கழிவறையை சுத்தம் செய்ய தண்ணீர் கொண்டு வந்தேன். மற்றவர்கள் அதனை சுத்தம் செய்தனர். இதுகுறித்த செய்தியை கேட்டு பள்ளிக்கு வந்த அலுவலர்கள், எங்களிடம் யாராவது கழிவறையை சுத்தம் செய்யச் சொன்னார்களா என்று கேட்டார்கள். நாங்கள் அவர்களுக்கு எல்லாவற்றையும் தெரிவித்தோம்” என கூறினார்.