தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நடிகர் சோனு சூட்டிற்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் கவுரவம்! - spicejet

டெல்லி: ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு உதவிய நடிகர் சோனு சூட்டை, ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் கவுரப்படுத்தியுள்ளது.

SonuSood
ஸ்பைஸ்ஜெட்

By

Published : Mar 20, 2021, 3:10 PM IST

ஊரடங்கு காலத்தில் வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக ஏற்பாடு செய்துதந்தார். ஸ்பெயினில் சிக்கியிருந்த சென்னை மாணவர்கள் வீடு திரும்ப விமான வசதி, பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை என எண்ணற்ற உதவிகளை சோனு சூட் செய்துவருகிறார்.

சோனு சூட்டின் நல உதவிகளை திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் எனப் பலரும் தொடர்ந்து பாராட்டிவருகின்றனர். இந்நிலையில், நடிகர் சோனு சூட்டின் புகைப்படத்தை விமானத்தில் வரைந்து அவருக்கு ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளது.

அதில், கரோனா காலகட்டத்தில் லட்சக்கணக்கான இந்தியர்கள் குடும்பத்தினருடன் இணைவதில், நடிகர் சோனு சூட் முக்கியப் பங்கு வகித்துள்ளார். அவருக்கு எப்படி நன்றி தெரிவிப்பது என்பது தெரியவில்லை. எவ்வாராயினும், அவரது பங்களிப்பைக் கவுரவிக்கும் விதமாக, அவரின் புகைப்படம் அடங்கிய எங்களின் போயிங் 737 விமானத்தை அறிமுகப்படுத்துகிறோம்.

எல்லாவற்றிற்கும் நன்றி, சோனு! நீங்கள் பலருக்கு உத்வேகமாக உள்ளீர்கள். உங்களுடன் இணைந்து பணியாற்றியதில் பெருமைகொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

பொதுமுடக்கம் சமயத்தில் சோனு சூட்டுடன் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், உலகளவில் பல நாடுகளில் சிக்கியிருந்த இரண்டரை லட்சம் இந்தியர்களை மீட்டுக் கொண்டுவந்துள்ளனர்.

இதையும் படிங்க:ஸ்ரீநகரில் ஃபர்ஸ்ட் நைட் விமானத்தை இயக்கிய கோஏர்!

ABOUT THE AUTHOR

...view details