ஸ்ரீநகர்:இந்திய நாட்டின் ராணுவ ரகசியங்களை தீவிரவாத இயக்கத்திற்கு வெளியிட்ட முகமது உபைத் மாலிக்கை தேசிய புலனாய்வு நிறுவனம் இன்று (மே 21) வடக்கு ஜம்மு குப்வாராவில் கைது செய்துள்ளது. நாட்டின் ரகசியம் மற்றும் அதன் அமைதி குறித்தும் தேசிய புலனாய்வு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது. நாட்டின் அமைதியை சீரழிக்கும் தீவிரவாத செயல்களை எதிர்க்கும் நோக்கத்தில் முகமது உபைத் மாலிக்கின் இந்த கைது நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த மாலிக் நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களைப் பற்றிய செய்திகளை உளவு பார்த்து, தீவிரவாத இயக்கத்திற்கு தெரியப்படுத்தி வந்துள்ளார். இது குறித்த ரகசிய தகவலின் அடிப்படையில் என்.ஐ.ஏ, (NIA) ஜம்முவில் பதுங்கி இருந்த மாலிக்கை இன்று சுற்றி வளைத்துப் பிடித்தனர். இதனைத்தொடர்ந்து மாலிகின் வீட்டை சோதனை செய்த போது சந்தேகப்படும் படியான பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மாலிகின் மீது விசாரணை மேற்கொண்ட போது, முன்னதாகவே இவர் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரி கூறுகையில், “தீவிரவாத பட்டியலில் முன்னதாகவே மாலிக் தேடப்பட்டு வருகிறார். இவர் தற்போது இந்திய நாட்டின் ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமதிற்கு துப்பு கொடுத்துள்ளார். இதனால், நாட்டில் பல்வேறு தீவிரத செயல்களுக்கு வழிவகுக்கும்.