கர்நாடகா: மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் நேற்று 'மகாராஷ்டிர விழாவில்’ பேசிய போது கர்நாடக எல்லைக்குள் இருக்கும் கிராமங்களான பெலகாம், காரார், நிப்பான் ஆகியப் பகுதிகளில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகம் வசிப்பதால் அந்த கிராமங்களை மகாராஷ்டிர அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர இருப்பதாகக் கூறினார். இது கர்நாடகா வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சை பேச்சை தொடர்ந்து இதற்குப் பதிலளிக்கும் விதமாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மகாராஷ்டிராவில் உள்ள கன்னடம் பேசும் மக்கள் அதிகமுள்ள கிராமங்களைக் கர்நாடக அரசின்கீழ் கொண்டு வருவது குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாகவும், மேலும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.