தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மனைவி குடும்பத்தை உயிருடன் கொளுத்திய கணவர் - பஞ்சாப்

பஞ்சாப் மாநிலத்தில் மனைவி மற்றும் குடும்பத்தினரை உயிரோடு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி குடும்பத்தை உயிருடன் கொளுத்திய கணவர்
மனைவி குடும்பத்தை உயிருடன் கொளுத்திய கணவர்

By

Published : Oct 18, 2022, 6:11 PM IST

ஜலந்தர்: பஞ்சாப் மாநிலத்தில் கஹ்லோன் என்ற நபர் குடும்பப் பிரச்சனை காரணமாக மனைவியின் குடும்பத்தை வீட்டோடு தீ வைத்து எரித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஜலந்தரின் மேத்பூர் பகுதியில் உள்ள மத்தேபூர் கிராமத்தில் வசித்து வந்தவர் பரம்ஜித் கவுர் 28 வயதான இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தனர், ஆனால் அவரது முதல் கணவர் இறந்த பிறகு, அவரது பெற்றோர் அவரை குர்சைத்புரா கிராமத்தைச் சேர்ந்த கஹ்லோன் என்ற நபருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தனர்.

அதன்பின் பரம்ஜித் கவுர் தனது இரண்டாவது கணவருடன் வசித்து வந்த நிலையில், அவரது கணவர் முதல் கணவருக்கு பிறந்த குழந்தைகளை எங்கேயாவது விட்டுவிடுமாறு கூறி தொடர்ந்து அவரையும் குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குழந்தைகளை விட மனமில்லாத பரம்ஜித் கவுர் கணவரிடம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் மோதல் அதிகமாகி, பரம்ஜித் கவுர் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்குப் பிறகு, அவரது கணவர் கஹ்லோ குழந்தைகளை விட்டுவிட்டு தன்னிடம் வருமாறு தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். ஆனால் பரம்ஜித் கவுர் அவர் பேச்சைக் கேட்கவில்லை.

இதனால் கோபமடைந்த கஹ்லோன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, தனது பெற்றோருடன் இருந்த பரம்ஜித் கவுர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு முழு குடும்பத்தின் மீதும் பெட்ரோலை தெளிப்பான் மூலம் தெளித்து, யாரும் வெளியே வராத வகையில் வீட்டின் வெளிப்புறத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு தீ வைத்து கொளுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட இந்த சம்பவத்தில் பரம்ஜித் கவுர், அவரது தந்தை சுர்ஜன் சிங், தாய் ஜோகிந்த்ரோ தேவி மற்றும் இரண்டு குழந்தைகள் குல்மோகர் மற்றும் அர்ஷ்தீப் ஆகியோர் உயிரிழந்தனர்” என தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யபட்டு குற்றவாளி மற்றும் அவரது கூட்டாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:பிற ஆண்களுடன் உடலுறவு கொள்ளும்படி கணவர் வற்புறுத்தியதாக மனைவி புகார்

ABOUT THE AUTHOR

...view details