தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Yamuna flood: காதல் சின்னத்தை தொட்ட யமுனை வெள்ளம்! - யமுனை நதி

யமுனை நதியில் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் தாஜ்மஹாலுக்கு முன்னால் உள்ள கைல்சா காட் உட்பட 28-க்கும் மேற்பட்ட பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதால் வெள்ள அபாயம் குறையும் வரை, மக்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளை காலி செய்யுமாறு அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 17, 2023, 4:15 PM IST

ஆக்ரா (உத்தரப்பிரதேசம்): கடந்த 45 ஆண்டுகளில் முதன்முறையாக யமுனை ஆற்றில் ஏற்பட்ட அதிகப்படியான வெள்ளம், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய தளமான தாஜ்மஹாலின் சுவர்களைத் தொட்டுள்ளது. ராம்பாக், எத்மதுடாவுலா, ஜோஹ்ரி பாக் மற்றும் மெஹ்தாப் பாக் போன்ற நினைவுச்சின்னங்களும் ஆபத்தில் இருக்கக்கூடிய நிலையில், நீர் மட்டம் அதிகரித்து தசரா காட் பகுதியை மூழ்கடித்துள்ளது.

பொய்யாகாட் பகுதியில் உள்ள மோக்ஷதம் மற்றும் தாஜ்கஞ்ச் தகன மைதானத்தில் யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளநீர் புகுந்ததால், அப்பகுதி மக்கள் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளைச் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் அவர்களது நிலை மோசமாகியுள்ளது. யமுனை நதியின் நீர்மட்டம் பலமடங்கு அதிகரித்து தாஜ்மஹாலுக்கு எதிரே அமைந்துள்ள கைல்சா காட் போன்ற நினைவுச் சின்னங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள 27 முக்கிய நினைவுச் சின்னங்களை மூழ்கடிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவிவருகிறது.

நாக்லா புத்தி, அமர் விஹார், தயால்பாக், பால்கேஷ்வர், ஜஸ்வந்த் கி சத்ரி, சரஸ்வதி நகர், ராதா நகர், ஜீவன் மண்டி, கிருஷ்ணா காலனி, பெலங்கஞ்ச், சக்சேரியா கலி, யமுனா கினாரா சாலை, உள்ளிட்ட வெள்ளப் பாதிப்பு பகுதிகளின் பட்டியலை நீர் பாசனத்துறை வெளியிட்டுள்ளது. வேதாந்த மந்திர் முதல் கோட்டை வரை, நீட்சி பாலம் மற்றும் சட்டா பஜார் வரை, கோகுல்புரா, கச்புரா, நாக்லா தேவ்ஜித், மார்வாரி பஸ்தி, மோதி மஹால், யமுனா பாலம் காலனி, கத்ரா வசீர் கான், ரம்பாக் பஸ்தி, அப்சரா டாக்கீஸ், பகவதி பாக், ராதா விஹார், கே.கே.நகர், ஜகதம்பா டிகிரி கல்லூரி மற்றும் பிற பகுதிகளில் வெள்ள அபாயம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

யமுனை ஆற்றின் வெள்ளம் ஏற்கனவே பல்வேறு கிராமங்கள், குடியிருப்புகள், காலனிகள் மற்றும் சாலைகளில் புகுந்துள்ளது. இந்த நிலையில் கைலாஷ், தனிஷ்க் ராஜ்ஸ்ரீ எஸ்டேட் காலனி, பொய்யா காட், அனுராக் நகர், சிக்கந்தர்பூர், யமுனா பேங்க் ஸ்ட்ரெச்சி பாலம் மற்றும் ஹாதி காட் ஆகிய பகுதிகள் யமுனை ஆற்றின் வெள்ளநீரால் பாதிக்கப்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வெள்ளத்தால் விவசாய நிலங்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளன. மேலும் வெள்ளத்தால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளன. எத்மத்பூர் தாலுகா மற்றும் ஃபதேஹாபாத் தாலுகாவில் உள்ள யமுனா கரை கிராமங்களில் விவசாயிகளுக்குச் சொந்தமான சுமார் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள எள் மற்றும் காய்கறி வயல்கள் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளன.

ரஹன்கலா, கட்புரா, ஷிஷியா, சுரேரா, பொய்யா, கிஜோலி, ராய்ப்பூர், ரிஹாவலி, சிலாவலி, தாராபுரா, இதாவுன், மடைனா மற்றும் வஜிபுரா போன்ற கிராமங்களில் இருந்தும் பயிர் நீரில் மூழ்கியதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன. வெள்ளம் காரணமாக வடிகால்கள் நிரம்பி வழியும் அபாயம் அப்பகுதி மக்களிடையே மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைப்புகள் நிலைமையை சமாளிக்கவும், வெள்ளத்தின் பாதிப்பைக் குறைக்கவும் அயராது உழைத்து வருகின்றன. சிக்கித் தவிக்கும் நபர்களை மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் நடைமுறைகள் நடந்து வருகின்றன. மேலும் பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு இணங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

யமுனை நதியின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆக்ரா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலைமை மோசமாக உள்ளது. உயிர்களைப் பாதுகாப்பதற்கும், கலாசார பாரம்பரிய தலங்களைப் பாதுகாப்பதற்கும், உள்ளூர் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கும் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், உடனடி உதவி அவசியம் என்பதாலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் பல்வேறு அமைப்புகள் மற்றும் சமூக தன்னார்வலர்களுடன் இணைந்து அரசு, நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Yamuna water: மெல்ல குறைகிறது யமுனை நதியின் நீர்மட்டம்!

ABOUT THE AUTHOR

...view details