தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேர்தலில் வென்ற பெண் வேட்பாளர்கள்.. பதவி ஏற்றுக்கொண்ட உறவினர்கள் - ம.பி.யில் அதிர்ச்சி! - MadhyaPradesh news

மத்தியப்பிரதேசத்தில் தேர்தலில் வென்ற பெண் வேட்பாளர்கள், தங்களது கணவர் அல்லது உறவினர்களை பதவியேற்றுக் கொள்ள அனுப்பி வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலில் வென்ற பெண் வேட்பாளர்கள்.. பதவி ஏற்றுக்கொண்ட உறவினர்கள் - ம.பி.யில் அதிர்ச்சி!
தேர்தலில் வென்ற பெண் வேட்பாளர்கள்.. பதவி ஏற்றுக்கொண்ட உறவினர்கள் - ம.பி.யில் அதிர்ச்சி!

By

Published : Aug 8, 2022, 8:54 AM IST

சாகர் (மத்தியப்பிரதேசம்): மத்தியப்பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள ஜெய்சிநகர் கிராமத்தில் பஞ்சாயத்து தேர்தலில் வென்றவர்களுக்கான பதவி ஏற்பு நிகழ்வு, கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு பதிலாக, அவர்களின் கணவர் மற்றும் உறவினர்களுக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

இதுகுறித்து ஜெய்சிநகர் பஞ்சாயத்து செயலாளர் ஆஷாராம் சாஹு கூறுகையில், "கிராம பஞ்சாயத்தில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாக உள்ளனர். அதில் 10 பெண்கள் பிரதிநிதிகள் உள்ளனர். இவர்களில் மூன்று பெண்கள் மட்டுமே பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.

பலமுறை அவர்களுக்கு ரிமைண்டர் அனுப்பப்பட்டும், அவர்கள் சில முக்கியமான குடும்ப வேலைகள் இருப்பதாக தெரிவித்தனர். எனவே, அவர்களது கணவர் மற்றும் பிற உறவினர்கள் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்” என தெரிவித்தார்.

ஏற்கனவே பஞ்சாயத்து தேர்தலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சியாக, பஞ்சாயத்து அளவிலான பதவிகளில் பெண்களுக்கு 50 சதவீத இடங்களை மத்தியப்பிரதேச அரசு ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தனி வீட்டுக்கு ரூ.3,419 கோடி மின் கட்டணம் - அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!

ABOUT THE AUTHOR

...view details