தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆக உயர்வு - போலி மதுபானத்தால் பறிபோன உயிர்கள்

குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. மெத்தனால் கலந்த மதுபானத்தை குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

death toll
death toll

By

Published : Jul 26, 2022, 8:29 PM IST

குஜராத்:பொடாட் மாவட்டத்தில் நேற்று (ஜூலை 25) கள்ளச்சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இன்று காலை நிலவரப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 28 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மதுபான தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளரை போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், மெத்தனால் கலந்த மதுபானத்தை குடித்ததால்தான் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், "அகமதாபாத்தில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் பணிபுரிந்த ஜெயேஷ் என்பவர் சுமார் 600 லிட்டர் மெத்தனாலை திருடி, குஜராத் மற்றும் ஹரியானாவில் பல்வேறு கிராமங்களுக்கு விற்பனை செய்துள்ளார்.

ஹரியானா மாநிலம் சோக்டி கிராமத்தைச் சேர்ந்த பிந்து என்பவர், ஜெயேஷிடமிருந்து மெத்தனாலை வாங்கி மதுபானம் தயாரித்து, விற்பனை செய்துள்ளார். அந்த மதுபானத்தில் 99 சதவீதம் மெத்தனால் கலந்திருந்ததால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. இந்த வழக்கில் 24 மணி நேரத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட சோதனைகளில் இதுவரை 460 லிட்டர் மெத்தனால் கலந்த மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க:குஜராத் கள்ளச்சாராயம்: பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு

ABOUT THE AUTHOR

...view details