புதுச்சேரிக்கு மத்திய அரசு சார்பாக 20 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 20 வென்டிலேட்டர்களை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் அளிக்கப்பட்டது.
புதுச்சேரிக்கு 40 வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் உபகரணங்கள் வழங்கிய மத்திய அரசு - Puducherry cm Rangasamy
புதுச்சேரி: மத்திய அரசு சார்பாக மேலும் 40 வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் உபகரணங்கள் புதுச்சேரி அரசுக்கு முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் கொடுக்கப்பட்டன.
மேலும் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் AIR FOUNDATION சார்பாக 17 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 25 bipap ventilatorகள் கொடுக்கப்பட்டன. இந்த ஏர் ஃபவுண்டேஷன் என்பது IIT மாணவர்களின் கூட்டு முயற்சியால் பல்வேறு நிறுவனங்களில் நிதி பெற்று புதுச்சேரி மாநிலத்துக்கு தேவைக்கேற்ப கொடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் முதலமைச்சர் ரங்கசாமி, அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும், கண்டிப்பாக 45 வயதிற்கு மேற்பட்டோர் அருகில் இருக்கும் சுகாதார நிலையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.