நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், கர்நாடகாவில் மாநில அமைச்சர் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.
பாலியல் வழக்கில் சிக்கிய அமைச்சர்: புகார் அளித்த ஆர்வலர்! - CD case of Minister
பெங்களூரு: கர்நாடக மாநில அமைச்சர் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ள நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் ஒருவர் இது குறித்து காலல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக ஆர்டிஐ ஆர்வலர் தினேஷ் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று நீர்வளத் துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலிக்கு எதிராகப் புகார் அளித்துள்ளார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பாலியல் வன்கொடுமை குறித்த புகார் அளிக்கவே வந்துள்ளேன். பாலியல் வன்கொடுமை குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணும் குடும்பத்தினரும் என்னிடம் கூறி உதவி கோரினர். வழக்கறிஞரிடம் இது குறித்து ஆலோசித்துவிட்டு பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாகப் புகார் அளிக்க வந்துள்ளேன்" என்றார்.