புது டெல்லி:டெல்லி சிறப்புப் பிரிவு காவல் துறையினர், 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உள்பட ஆறு பேரை கைது செய்துள்ளனர்.
இதில் கைதான பயங்கரவாதிகள் நாடு முழுவதும் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற திட்டமிட்டிருந்ததாக சிறப்புப் பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் ஜான் முகமது அலி ஷேக், ஜீஷன் கமர், ஒசாமா, முகமது அபு பக்கர் ஆகிய 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது குறித்து டெல்லி சிறப்பு காவல் உயர் அலுவலர் பிரமோத் சிங் குஷ்வாகா கூறியதாவது, “டெல்லியில் பயங்கரவாதிகள் ஊடுருவி பயங்கரவாத செயல்களில் ஈடுபட சதி தீட்டியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 2 பேர் பாகிஸ்தானில் பயங்கரவாத பயிற்சி பெற்றவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் டெல்லி, உத்தரப் பிரதேஷம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் முக்கிய நகரங்களில் வெடிகுண்டு வைக்க சதி திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், பயங்கர ஆயுதங்கள், கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடக்கிறது” என்றார்.
இதையும் படிங்க: எங்கள் துணை பிரதமர் உயிரோடுதான் இருக்கிறார் - தாலிபான் அறிவிப்பு