ஹைதராபாத் : தெலங்கானாவின் வாராங்கல்லில் உள்ள ராமப்பா கோயில் காகத்திய வம்சத்தை சேர்ந்த கணபதி தேவாவின் (Ganapati Deva) படைத்தளபதி ரெச்சார்லா ருத்ர ரெட்டி (Recharla Rudra Reddy) 1213ஆம் ஆண்டு கட்டினார்.
இந்தக் கோயில் முலுகு (Mulugu) மாவட்டத்தில் உள்ள பாலம்பேட் (Palampet) கிராமத்தில் அமைந்துள்ளது. காகத்திய கட்டடக் கலையின் அம்சமான இக்கோயில் யூனெஸ்கோவால் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 25) அங்கீகரிக்கப்பட்டது.
இது அவ்வளவு எளிதாக நடைபெறவில்லை, ரஷ்யா உதவியது. முன்னதாக இக்கோயில் 2019ஆம் ஆண்டு யூனெஸ்கோ பட்டியலில் அங்கீகரிக்க பரிந்துரைக்கப்பட்டது. இறுதியாக நாட்டின் 39ஆவது உலக பாரம்பரிய சின்னமாக யூனெஸ்கோ ராமப்பா கோயிலை அங்கீகரித்துள்ளது.
கோயிலின் சிறப்பம்சங்கள்
மிதக்கும் கற்கள் : கோயில் மிதக்கும் செங்கற்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளன. கோயிலின் மேற்கூரையில் மிதக்கும் செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கோயில் செம்மண் கொண்டு கட்டப்பட்டுள்ளது.
தொழிற்நுட்பம் : பூமி அதிர்ச்சி, போர், இயற்கை அழிவுகளை எதிர்கொள்ளும் வகையில் Sandbox technique உபயோகிக்கப்பட்டுள்ளது.