தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மொபைல் வாங்கித் தராததால் தாயைக் கொன்ற மகன் - murder in Sheripally village

ஜொகலும்பா கட்வால் மாவட்டத்திலுள்ள ஷெரிப்பள்ளி கிராமத்தில், மொபைல் போன் வாங்கித் தராததால் தன் தாயையே மகன் கொன்ற சம்பவம் நடந்தேறியுள்ளது.

மொபைல் வாங்கித் தராததால் தாயைக் கொன்ற மகன்
மொபைல் வாங்கித் தராததால் தாயைக் கொன்ற மகன்

By

Published : Mar 26, 2022, 9:44 PM IST

தெலுங்கானா:ஜொகலும்பா கட்வால் மாவட்டத்திலுள்ள ஷெரிப்பள்ளி கிராமத்தில் தனக்கு மொபைல் போன் வாங்கித் தராததால் தன் தாயையே மகன் கொன்ற சம்பவம் நடந்தேறியுள்ளது.

மூத்த மகனான மகேஷ் எனும் இவர் தனது இடைநிலை படிப்பை முடித்து விட்டு கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவரது தாய் , கணவன் படுத்தப் படுக்கையில் நோய்வாய்ப்பட்டவராக இருக்க விவசாய வேலை செய்து தனது இரண்டு மகன்கள் மற்றும் குடும்பத்தை நடத்திவந்துள்ளார்.

மொபைல் போன் வாங்கித் தராததால் தாக்கிய மகன்:இந்நிலையில், மகேஷ் பல நாள்களாக தனது தாயாரிடம் தனக்கு மொபைல் போன் வாங்கித் தர சொல்லி கேட்டு வந்துள்ளார்.

தனது பொருளாதார சூழலால் மகேஷின் ஆசையை நிறைவேற்ற முடியாத அவரது தாயார் இதை தட்டிக்கழித்துள்ளார். இந்தச் சண்டை முற்றியதில், ஆத்திரமடைந்த மகேஷ், அருகே இருந்த உலக்கையை எடுத்து தனது தாயை தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலால் இவரது தாயார் மயக்கமடைந்து கிழே விழுந்துள்ளார்.

இந்த சத்தத்தைக் கேட்ட குடும்ப நபர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்தனர். எனினும், கடுமையான ரத்தப் போக்கினால் உயிரிழந்தார், இதுகுறித்து அம்மாநில காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதையும் படிங்க:இறந்த மகளை 10 கிமீ தோளில் சுமந்து சென்ற தந்தை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details