ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில், அக்னிபத் திட்டத்தை எதிர்த்து கடந்த 17ஆம் தேதி போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் வன்முறையாக மாறி ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் தமேரா ராகேஷ் என்ற இளைஞர் உயிரிழந்தார்.
அக்னிபத் கலவரத்தில் உயிரிழந்த இளைஞரின் சகோதரருக்கு அரசு வேலை - சந்திர சேகரராவ் உத்தரவு!
அக்னிபத் கலவரத்தில் உயிரிழந்த இளைஞரின் சகோதரருக்கு அரசு வேலை வழங்க தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகரராவ் உத்தரவிட்டுள்ளார்.
Telangana
இவரது குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்திருந்தார். இந்த நிலையில், தமேரா ராகேஷின் சகோதரருக்கு அரசு வேலை வழங்க தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது. அவரது தகுதிக்கேற்ற வேலை வழங்க வாராங்கல் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீட்பு