தமிழ்நாடு

tamil nadu

உதயமானது "பாரத ராஷ்டிர சமிதி" கட்சி!

By

Published : Dec 9, 2022, 9:03 PM IST

கேசிஆரின் "பாரத ராஷ்டிர சமிதி" கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதையடுத்து தெலங்கானா பவனில் பிஆர்எஸ் கொடி ஏற்றப்பட்டது.

telangana
telangana

ஹைதராபாத்: 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை முன்னிட்டு, பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஈடுபட்டிருந்தார். அதன் ஒரு பகுதியாக தேசிய கட்சி தொடங்கவும் முடிவு செய்தார்.

அதன்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் தனது மாநில கட்சியான "தெலங்கானா ராஷ்டிர சமிதி"-ஐ தேசியக் கட்சியாக அறிவித்தார். அந்த தேசிய கட்சிக்கு "பாரத ராஷ்டிர சமிதி" என பெயர் வைத்தார். தேசிய கட்சியாக மாற்றியது குறித்து தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்குத் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து தெலங்கானா பவனில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.

பிஆர்எஸ் தேசிய கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்ததற்காக, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிஆர்எஸ் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்ததை தெலங்கானா பவனில், கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாகக் கொண்டாடினர்.

இதையும் படிங்க: ‘பாரத் ராஷ்டிர சமிதி’ - புதிய தேசிய கட்சியின் பெயரை அறிவித்தார் சந்திரசேகர ராவ்

ABOUT THE AUTHOR

...view details