தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தெலங்கானாவில் முடிவுக்கு வருகிறது நிலப்பிரபுத்துவ காலத்திய VRA முறை - முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அதிரடி! - கிராம வருவாய் உதவியாளர்

தெலங்கானா மாநிலத்தில் பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்து வரும் கிராம வருவாய் உதவியாளர்கள் (VRA) பணியிடங்கள் இன்றைய சூழலில் பொருத்தமற்றதாகி விட்டதால், அதை அகற்றும் முடிவை முதலமைச்சர் சந்திரசேகர ராவ் எடுத்து உள்ளார்.

தெலங்கானாவில் முடிவுக்கு வருகிறது நிலப்பிரபுத்துவ காலத்திய VRA முறை - முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அதிரடி!
தெலங்கானாவில் முடிவுக்கு வருகிறது நிலப்பிரபுத்துவ காலத்திய VRA முறை - முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அதிரடி!

By

Published : Jul 24, 2023, 2:12 PM IST

ஹைதராபாத்:நிலப்பிரபுத்துவ அமைப்பைக் குறிக்கும் வகையிலான கிராம வருவாய் உதவியாளர் ((VRA) முறை, தெலங்கானா மாநிலத்தில் முற்றிலும் ஒழிக்கப்பட உள்ளது. நீரடி, மஸ்குரு, லுஷ்கர் மற்றும் ஷகாசிந்தி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் கிராம வருவாய் உதவியாளர்கள் முறையை, முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் நீக்கும் முடிவை எடுத்ததன் மூலம் சரித்திரத்தில் இடம்பிடிக்க உள்ளார்.

மாநிலம் முழுவதும் உள்ள கிராம வருவாய் உதவியாளர் ஊழியர்கள் வருவாய்த்துறையில் உள்ள சூப்பர்நியூமரரி பணியிடங்களில் முறைப்படுத்தப்படுவார்கள் என முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்து உள்ளார். அமைச்சரவை துணைக் குழுவின் பரிந்துரைகள், தற்போதுள்ள விதிமுறைகள் மற்றும் தகுதிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நகராட்சி நிர்வாகம், பாகீரத திட்டம், பாசனப் பிரிவு போன்றவற்றில் உள்ள அனைத்து கிராம வருவாய் உதவியாளர் ஊழியர்களும் அதற்கேற்ப மாற்றி அமைக்கப்படுவார்கள். அவர்கள் நிரந்தர அரசு ஊழியர்களாக நியமிக்கப்படுவார்கள்.

இது தொடர்பான உத்தரவை பிறப்பிக்க தலைமைச் செயலாளர் சாந்திகுமாரியிடம், முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவு பிறப்பித்து உள்ளார். தெலங்கானா மாநிலம் முழுவதும் மொத்தம் 20,555 கிராம வருவாய் உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் சிலர் படிப்பறிவில்லாதவர்கள் ஆவர். சிலர் ஏழாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, இடைநிலை மற்றும் ஒரு சிலர் பட்டப்படிப்பு மற்றும் உயர் படிப்பை முடித்தவர்களாக உள்ளனர். அவர்களின் கல்வித் தகுதிகளின் அடிப்படையில் வேலை வகைகளை அரசாங்கம் தீர்மானிக்க உள்ளது. அவர்கள் அந்தந்த விதிமுறைகளின்படி அந்தந்த துறைகளில் நியமிக்கப்பட உள்ளனர்.

உயர்கல்வி படித்து பதவி உயர்வு பெற தகுதியானவர்கள், அதற்கான தகுந்த பணியிடங்களில் நியமிக்கப்படுவர். கருணை நியமனத்தின் கீழ், 61 வயதுக்கு மேற்பட்ட கிராம வருவாய் உதவியாளர்களின் உறவினர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட உள்ளது. 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் தேதிக்குப் பிறகு ஏதேனும் ஒரு காரணத்திற்காக, பணியின் போது, அதாவது 61 வயதுக்கு முன் மரணம் அடைந்த கிராம வருவாய் உதவியாளர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்து உள்ளார்.

கிராம வருவாய் உதவியாளர் அமைப்பின் உயர் அதிகாரிகளுக்கு, மரணம் அடைந்த கிராம வருவாய் உதவியாளரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் கல்வித் தகுதிகள் பற்றிய விவரங்களை விரைவில் தொகுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். அவர்கள் தகுதி மற்றும் விதிகளின் அடிப்படையில் அந்தந்த துறைகளில் உள்ள அரசுப் பணிகளில் மாற்றியமைக்கப்பட உள்ளனர். மக்களின் தேவைகள் மற்றும் சமூகப் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப அரசுகள், முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் காலத்துக்குக் காலம் மங்கிப் போகும் துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்குப் பணிப் பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசுகளின் பொறுப்பு என முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வலியுறுத்தி உள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் நடைமுறையில் உள்ள கிராம வருவாய் உதவியாளர் பணியிடங்களை முறைப்படுத்துதல், சரிசெய்தல் மற்றும் நிலைப்படுத்துதல் குறித்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தை முதலமைச்சர் சந்திரசேகர ராவ், சமீபத்தில் நடத்தி இருந்தார். தலைமுறை தலைமுறையாக சமூக சேவை செய்து வரும் கிராம வருவாய் உதவியாளர்களின் சுய தியாக சேவையை பாராட்டிய முதலமைச்சர் சந்திரசேகர ராவ், இன்றைய சூழ்நிலையில், கிராம வருவாய் உதவியாளர் அமைப்பு அதன் மகத்துவத்தை இழந்துவிட்டது. கிராம வருவாய் உதவியாளர் களுக்கு வருவாய்த்துறையில் சூப்பர்நியூமரரி பணியிடங்கள் வழங்கப்பட்டு அவர்கள் நிரந்தரமாக அரசு ஊழியர்களாக பணியமர்த்தப்பட உள்ளனர். இதற்கான கொள்கையை அரசு ஏற்றுக் கொண்டு உள்ளதாகவும், அதனடிப்படையில், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக, முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குறிப்பிட்டு உள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு, கிராம வருவாய் உதவியாளர் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க: எல்லை தாண்டிய காதல் - காதலரை சந்திக்க பாகிஸ்தான் சென்ற இந்திய பெண்!

ABOUT THE AUTHOR

...view details