பாட்னா:பிகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதால், ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் கடந்த சனிக்கிழமை எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறுகையில், லாலு பிரசாத் யாதவின் சிறுநீரகம் 25% மட்டுமே செயல்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது எனத் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவருக்கு விடுதலை பத்திரத்தை அனுப்பி வைத்த லாலு மகன் - ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ்
தனது தந்தையை விடுதலை செய்யக்கோரி பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்தின் இளைய மகன் தேஜ் பிரதாப் யாதவ் 50 ரூபாய் மதிப்புள்ள விடுதலை பத்திரத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
Tej Pratap Yadav sends 50,000 'Azadi Patra' to President for Lalu's release
இந்நிலையில், லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேவ் பிரசாத் யாதவ், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள விடுதலை பத்திரத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அனுப்பி வைத்ததுடன், தன்னுடைய தந்தையை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பிகார் மற்றும் இந்தியாவில் தனது தந்தையை பின்தொடர்பவர்கள் விடுதலை பத்திரத்தை அனுப்ப வேண்டும் எனவும், அவர் விடுதலை அடையும்வரை இந்த பத்திரங்கள் சேகரிப்பது தொடரும் எனவும் தெரிவித்தார்.