டெல்லி:கனடா செய்தி தொடர்பாளர் முகமது ஹுசைன் கூறும் போது, G20 மாநாட்டில் கலந்து கொள்ள வந்த கனடா பிரதமர் விமானம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானத்தின் தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யும் பணியானது நடைபெற்று வந்தன. இந்த நிலையில் இன்று விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது குழுவினர் இன்று (செப்.12) பிற்பகல் புறப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
G20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அவரது மகன் சேவியர் மற்றும் குழுவினர் கடந்த வெள்ளிக்கிழமை (செப்.8) தலைநகர் டெல்லிக்கு விமானம் மூலம் வந்தடைந்தனர். இந்த நிலையில் G20 மாநாடு முடிந்து ஞாயிற்றுக்கிழமை கனடா பிரதமர், அவரது மகன் மற்றும் குழுவினர் விமானம் மூலம் கனடா புறப்படவிருந்தனர். இந்த நிலையில், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.. இதனையடுத்து, கனடா பிரதமர் டெல்லியில் தங்கியிருந்து தனது பணிகளை மேற்கொண்டு இருந்தார் என தெரிவிக்கப்பட்டன.
இதையும் படிங்க:டிஜிட்டல் கட்டமைப்பில் ஜி20 நாடுகளுக்கிடையே கருத்தொற்றுமை - இந்தியாவிற்கு பில்கேட்ஸ் பாராட்டு!
கனடா பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ள அறிவிப்பில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை அழைத்து செல்ல மாற்று விமானம் இங்கிலாந்திற்கு செவ்வாய்க்கிழமை (செப்.12) அதிகாலை வரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டெல்லியில் உள்ள ஹோட்டலில் தங்கி தனது பணிகளை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ராயல் கனடியன் விமானப்படை சிசி-150 போலரிஸ் விமானத்தை இந்தியாவிற்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தன.