ஆந்திரப் பிரதேசம்:எதிர்க்கட்சித் தலைவரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு சட்டப்பேரவையில் உடைந்து அழுத சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, தான் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னரே ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைக்குள் மீண்டும் காலடி எடுத்து வைப்பேன் எனச் சபதமிட்டுள்ளார்.
’ஆளும் கட்சியினர் அவதூறுப் பேச்சு’
முன்னதாக சட்டப்பேரவையில் பேசிய சந்திரபாபு நாயுடு தன்னை எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அவதூறாகப் பேசி வருவது வேதனையளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் உணர்ச்சித் தழும்ப பேசிய அவர், "கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்களால் நான் அவமானப்படுத்தப்பட்டும் அவற்றை தாங்கிக் கொண்டு அமைதியாக இருந்தேன். ஆனால் இன்று அவர்கள் என் மனைவியைப் பற்றியும் பேசியுள்ளனர்.
’மரியாதையுடனே வாழ்ந்துள்ளேன்’
நான் எப்போதும் மரியாதையுடனும், மற்றவருக்கு மரியாதை கொடுத்துமே வாழ்ந்துள்ளேன். ஆனால் இனியும் இதை இப்படியே எடுத்துச் செல்ல முடியாது" என்றார்.
உடைந்து அழுத சந்திரபாபு நாயுடு அதனையடுத்து அவர் தொடர்ந்து பேச முற்பட்டபோது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவரது கருத்தை ’நாடகம்’ என விமர்சித்துள்ளனர்.
அதனையடுத்து சபாநாயகர் தம்மினேனி சீதாராம் சந்திரபாபு நாயுடு மைக்கை அணைத்துள்ளார். தொடர்ந்து வேளாண் சட்டங்கள் குறித்த விவாதத்தின்போது இரு கட்சியினருக்குமிடையே விவாதம் முற்றியுள்ளது.
உடைந்து அழுத சந்திரபாபு நாயுடு
உடைந்து அழுத சந்திரபாபு நாயுடு இந்நிலையில் விரக்தியில் சட்டப்பேரவையில் தன் அறைக்குச் சென்று தனது கட்சி உறுப்பினர்களுடன் ஒரு திடீர் சந்திப்பை நடத்தியுள்ளார். அப்போது வேதனை தாளாமல் சந்திரபாபு நாயுடு உடைந்து அழுதார்.
இதில் திகைத்துப்போன தெலுங்கு தேசம் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவரை ஆறுதல்படுத்தி மீண்டும் சபைக்கு அழைத்து வந்தனர். அதனையடுத்து தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் வரை சட்டப்பேரவையிலிருந்து விலகி இருப்பதாக சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.
இதையும் படிங்க:Farm Laws : சத்தியாகிரகத்தின் முன் அகம்பாவம் அடிபணிந்தது - வேளாண் சட்ட நீக்கம் குறித்து ராகுல் காந்தி