தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெருந்தொற்று காலம் முடியவில்லை - டாடா நிறுவன இயக்குநர் எச்சரிக்கை - தடுப்பூசியின் அவசியம்

பெருந்தொற்று காலம் என்பது இன்னும் நிறைவடையவில்லை என்பதை ஒமைக்ரான் தொற்று மூலம் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என டாடா நிறுவன இயக்குநர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

Tata Institute director on Omicron
Tata Institute director on Omicron

By

Published : Dec 5, 2021, 10:59 AM IST

ஹைதராபாத்:கரோனா தொற்றின் முதல், இரண்டாவது அலை தாக்கத்தில் இருந்து மக்கள் மெல்ல இயல்பு நிலைக்கு, புதியதாக உருமாறிய ஒமைக்ரான் தொற்று பரவல் இப்போது பேரச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒமைக்ரான் தொற்றைத் தடுக்க, வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ளது. மேலும், பயணிகள் அனைவருக்கும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

சமூகத்தில் பெருந்தொற்றின் தாக்கம்

இந்நிலையில், இந்தியாவின் ஒமைக்ரான் தொற்று பரவல் குறித்து டாடா மரபணு மற்றும் சமூக நிறுவனத்தின் இயக்குநர் ராகேஷ் மிஸ்ரா கூறுகையில், "பெருந்தொற்று காலம் என்பது இன்னும் நிறைவடையவில்லை என்பதை ஒமைக்ரான் தொற்று மூலம் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். சமூகத்தில் தொற்று எவ்வளவு தாக்கம் செலுத்தியுள்ளது என்பது மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

இந்த பெருந்தொற்று காலத்தில் நாம் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால், தடுப்பூசி மற்றும் வலுவான சுகாதார அமைப்புகள் மூலம் எந்தவகை தொற்றிலிருந்தும் தற்காத்துக்கொள்ள முடியும்.

தடுப்பூசிதான் கேடயம்

எனவே, கவனக்குறைவாக இருந்து இந்த நிலையை மாற்றிவிடக்கூடாது. மக்கள் அரசுடன் ஒத்துழைத்து அனைவரும் தடுப்பூசிப் போட வேண்டும். அரசும் தொற்று பரவல் குறித்து தொடர்ந்து கண்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் செலுத்தப்படும் கரோனா தொற்று தடுப்பூசிகள், ஒமைக்ரான் எதிரான போராட்டத்தில் பயனுள்ளதாக இருக்கும். நாட்டு மக்களுக்கு தடுப்பூசிதான் கேடயமாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒமைக்ரான் வைரஸ்: மகாராஷ்டிராவில் நான்காவது நபருக்கு தொற்று உறுதி!

ABOUT THE AUTHOR

...view details