டெல்லி: இன்று (ஜன.27) ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் அதிகாரப்பூர்வமாக கைப்பற்றியுள்ளதாக டாடா நிறுவன குழுமத் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “மீண்டும் ஏர் இந்தியாவை டாடா குழுமத்திடம் பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அனைவருக்கும் உலகத் தரம் வாய்ந்த விமான சேவை வழங்க ஆர்வமாகக் காத்திருக்கிறோம். ஏர் இந்தியாவில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களையும் டாடா குழுமம் அன்போடு வரவேற்கிறது. அவர்களோடு இணைந்து செயல்பட ஆவலாக இருக்கிறோம்” எனக் கூறினார்.