திருச்சூர்:தமிழ்நாட்டைச் சேர்ந்த மினி பேருந்து ஒன்று, பயணிகள் உடன் கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், இன்று (மே 25) அதிகாலை 4 மணியளவில் திருச்சூர் மாவட்டம் தாலூர் ஜெருசலேம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த மினி பேருந்து, திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால், அந்த இடத்தில் என்ஜின் பழுதால் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின் பக்கத்தின் மீது மினி பேருந்து அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 23 பேர் காயம் அடைந்தனர். இதனையடுத்து, காயம் அடைந்த அனைவரும் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரம், காயம் அடைந்த 23 பேரில், 5 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக, நேற்றைய முன்தினம் (மே 23) அன்று இரவு 7 மணியளவில், இடுக்கி மாவட்டத்தின் பூப்பரா சூண்டல் என்ற குடியிருப்பு பகுதியில் காட்டு யானை ஒன்று புகுந்துள்ளது.
எனவே, இந்த காட்டு யானையை அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக குடியிருப்பு பகுதிக்குள் இருந்த காட்டு யானை, அருகில் இருந்த தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு வந்துள்ளது. அந்த நேரத்தில், அதிவேகமாக வந்த கார் காட்டு யானை மீது மோதி உள்ளது.