புதுச்சேரி: மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த ஆடி திருவாதிரை தினம், இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.11) அறிவித்தார்.
இதைதொடர்ந்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, " மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடித்திருவாதிரை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது மகிழ்ச்சி.
அதே நேரத்தில் 2016ஆம் ஆண்டு மகாராஷ்ரா மாநிலத்தில் ஆட்சியிலிருந்த பாஜக அரசு அங்குள்ள துறைமுகத்திற்கு நம் தமிழ் மன்னரான ராஜேந்திர சோழனின் பெயரை வைத்து அவரின் உருவப்படத்தையும் திறந்து பெருமை சேர்த்துள்ளது.
அதே போல மும்பையிலிருந்து லண்டன் செல்லும் ஒரு அரசு விமானத்திற்கு மாமன்னர் ராஜேந்திர சோழனின் பெயர் சூட்டப்பட்டது என்பதை மகிழ்வுடன் நினைவுகூர்ந்து பதிவிடுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழா’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்