தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம்! - தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி: காரைக்காலில் உள்ள பிரசித்திப் பெற்ற சனி பகவான் கோயிலில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார்.

puducherry-governor-tamilisai-soundarajan-sami-darshan-at-thirunallar-saneeswara-bhagavan-temple
puducherry-governor-tamilisai-soundarajan-sami-darshan-at-thirunallar-saneeswara-bhagavan-temple

By

Published : Feb 21, 2021, 6:54 AM IST

Updated : Feb 21, 2021, 8:32 AM IST

புதுச்சேரி மாநிலம் காரைக்காலுக்கு நேற்று (பிப்.20) பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வருகை தந்திருந்தார். பின் காரைக்காலில் உள்ள பிரசித்திப் பெற்ற திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்திற்கு குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.

ஆளுநர் தமிழிசையை மாவட்ட துணை ஆட்சியர், கோயில் நிர்வாக அலுவலர் ஆதர்ஷ் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து கோயிலில் சனி பகவானை தரிசிக்கும் போது சிவாச்சாரியர்கள் அவருக்கு மாலை அணிவித்து சிறப்பு மரியாதை வழங்கினர்.

அப்போது தனக்கு பாதுகாப்புக்காக இருந்த மூன்று அலுவலர்களுக்கும் மாலை அறிவிக்குமாறு தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டதைத் அடுத்து, அலுவலர்களுக்கும் மாலை அணிவித்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இச்சம்பவம் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் அங்கு இருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.

இதையும் படிங்க: காங்கிரஸ் ஆட்சியை தக்கவைப்பாரா நாராயணசாமி? பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை உத்தரவு!

Last Updated : Feb 21, 2021, 8:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details