புதுச்சேரி: நாடு முழுவதும் இன்று (ஜன. 26) 73ஆவது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் குடியரசு தின விழா நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்து கொண்ட புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அலுவலர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
இதனை தொடர்ந்து காவல்துறையினர், முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது. இவ்விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர் உள்ளிட்ட அரசு துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் குறைந்த அளவில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப் பட்டிருந்தது. விழாவில் கலந்து கொண்ட அனைவரும் முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியில் அமர வைக்கப்பட்டிருந்தனர். விழாவையொட்டி கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு அமைக்கப்பட்டிருந்தது.
சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கம்