புதுச்சேரிமாநிலத்தின் துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்று இன்றுடன்(பிப்.18) ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த நாளை முன்னிட்டு துணைநிலை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நிகழ்ச்சியும், 'ஓராண்டு செயல்பாடுகள்' குறித்த தொகுப்பு நூல் வெளியிடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை பதவியேற்று ஓராண்டு நிறைவு
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு, தமிழிசை சௌந்தரராஜனுக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அவருடன் சட்டப் பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் க. லட்சுமி நாராயணன், போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா, குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய் சரவணன் குமார், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:பாஜக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை - சுயேச்சை எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டு