தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜக மேடையில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' அவமதிப்பு.. கர்நாடகாவில் நடந்தது என்ன? - கனிமொழி

கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் அவமதிக்கப்பட்ட சம்பவம் தமிழர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 28, 2023, 7:17 AM IST

Updated : Apr 28, 2023, 7:51 AM IST

பெங்களூரு: கர்நாடகாவில் அடுத்த மாதம் 10-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. 224 தொகுதிகளைக் கொண்ட அம்மாநிலத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுவதால் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள ஷிவமோகா(shivamogga) பகுதியில் பல தலைமுறைகளாக லட்சக்கணக்கான தமிழர்கள் வசித்து வருகின்றனர். அதனை நிரூபிக்கும் வகையில் இந்த பகுதியில் 'ஷிவமோகா தாய்த்தமிழ் சங்கம்' மிகவும் பிரபலமான அமைப்பாக இயங்கி வருகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை (ஏப்ரல் 27) அன்று ஷிவமோகா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் கூட்டம் நடைபெற்றது. அம்மாநில முன்னாள் துணை முதலமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகத் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் கர்நாடக மாநில பாஜக தலைவர் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

இதையும் படிங்க: Karnataka Elections 2023 : தோசை சுட்டு வாக்கு சேகரித்த பிரியங்கா காந்தி - வீடியோ வைரல்!

கூட்டம் தொடங்கிய உடன் கூட்டத்தை ஒருங்கிணைத்திருந்த தமிழர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை ஒலிப்பெருக்கியில் இசைக்க வைத்தனர். பின்னர், விழா மேடையிலிருந்த தலைவர்கள், கூட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். மேடையிலிருந்த கே.எஸ்.ஈஸ்வரப்பா திடீரென மைக் இருந்த இடத்திற்குச் சென்று பாடலை கட்டாயப்படுத்தி நிறுத்தினார். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது.

பின்னர், கூட்டத்தில் இருக்கும் பெண்களில் யாரேனும் வந்து கர்நாடக மாநில பாடலை பாடும் படி கே.எஸ்.ஈஸ்வரப்பா கேட்டுக்கொண்டார். இதனால் மேடையிலிருந்த அண்ணாமலை அதிர்ச்சியில் ஆழ்ந்தார். பின்னர் ஒலிப்பெருக்கி மூலம் கர்நாடக மாநில பாடல் இசைக்கப்பட்டு நிகழ்ச்சி தொடங்கியது.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்ட சம்பவம் தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இதையும் படிங்க: வாகனப்பேரணியில் சாலை விதிமீறல்: பிரதமர் மோடி மீது புகார்; கேரளாவில் சம்பவம்!

Last Updated : Apr 28, 2023, 7:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details