தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஏ.ஆர்.ரஹ்மானுடன் தர்ஹா சென்ற நடிகர் ரஜினிகாந்த் - வீடியோ வைரல் - super star rajinikanth

கடப்பாவில் உள்ள தர்ஹாவிற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது குடும்பத்தினருடன் நடிகர் ரஜினிகாந்த் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்

By

Published : Dec 15, 2022, 5:38 PM IST

ஏ.ஆர்.ரஹ்மானுடன் தர்ஹா சென்ற நடிகர் ரஜினிகாந்த் - வீடியோ வைரல்

கடப்பா(ஆந்திர பிரதேசம்): நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து கடப்பாவில் உள்ள புகழ்பெற்ற தர்ஹாவிற்கு சென்றார்.

தர்ஹா வந்த நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் குடும்பத்தினருக்கு இமாம் உள்ளிட்ட தர்ஹா நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வருகையை முன்னிட்டு தர்ஹா பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக மகள் ஐஸ்வர்யாவுடன் திருமலை திருப்பதிக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றார். திருமலை தேவஸ்தான அலுவலர்கள் ரஜினி மற்றும் ஐஸ்வர்யாவுக்கு வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து திருமலை ஸ்ரீவாரி சுப்ரபாத சேவையில் மகளுடன் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், சாமி ஏழுமலையானை தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் மற்றும் கடப்பா தர்ஹாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க:மருத்துவமனைக்கு திடீர் விசிட் அடித்த அமைச்சர் - 4 மருத்துவர்கள் சஸ்பெண்ட்

ABOUT THE AUTHOR

...view details