தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேகதாது விவகாரம்: தமிழ்நாடு அரசு மேல்முறையீடு! - தேசிய பசுமை தீர்ப்பாயம்

மேகதாது அணை விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

SC
SC

By

Published : Aug 11, 2021, 11:00 PM IST

டெல்லி : காவிரி குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5 ஆயிரத்து 912 கோடி மதிப்பில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் மேகதாது பகுதியில் அணை கட்டப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழுவை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஜூன் 16ஆம் தேதி கலைத்தது.

இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், “காவிரி குறுக்கே மேகதாது அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ளது.

மேலும், சூற்றுச்சூழலை பாதுகாக்கவும், வனப்பகுதி ஆக்கிரமிப்பு, கட்டுமானங்களை தடுக்கவும் பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் உண்டு.

அந்த வகையில் பத்திரிகை மற்றும் ஊடக செய்திகளின் அடிப்படையில் குழு அமைக்கப்பட்டது. மேலும் கர்நாடக மாநில அரசு 2018 உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்பட்டுவருகிறது. ஆகவே தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : மேகதாது அணை விவகாரம்: முதலமைச்சர் டெல்லி பயணம்!

ABOUT THE AUTHOR

...view details